தொல்காப்பியர் ஆய்விருக்கை, கிறித்தவமும் தமிழும் அறக்கட்டளை,

நிகழ்வு நாள் : 28.02.2020

தமிழ்த்தாய் 72, தமிழாய்வுப் பெருவிழா 28.02.2020 – வெள்ளி நிகழ்வில் முற்பகல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட ரூ.50.00 இலட்சம் நிதி நல்கையில் தொடங்கப்பெற்ற தொல்காப்பியர் ஆய்விருக்கையில் பேரா. மருதூர் ச. அரங்கராசன் அவர்களின் “தமிழில் வேற்றுமைக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் அமைந்த சிறப்புச் சொற்பொழிவு இருக்கையின் பொறுப்பாளர் முனைவர் அ.சதீஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. பிற்பகல் முனைவர் பா.இராசா அவர்கள் பொறுப்பாளராக உள்ள கிறித்தவமும் தமிழும் அறக்கட்டளையில் ஓவியக்கலை நிபுணர் முனைவர் செ.வெங்கட்ராமன் அவர்களின் “தமிழக ஓவியங்களிலும் சுடுமண் உருவங்களிலும் ஆடைகள்” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றது.