டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 27.02.2020

தமிழ்த்தாய் 72, தமிழாய்வுப் பெருவிழா 27.02.2020 – வியாழன் முற்பகல் நிகழ்வில் டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை சார்பில் “தமிழ்ச்சுவடி வரலாற்றில் எண் கணிதம்” என்ற தலைப்பில் புலவர் வே.பிரபாகரன் அவர்களின் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது. நிறுவன பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி ஆ.செண்பகவள்ளி அவர்கள் தொகுத்து வழங்கிட திருமதி க.சசிகலா அவர்கள் நன்றி நவின்றார்.