பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அறக்கட்டளை, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 26.02.2020

தமிழ்த்தாய் 72, தமிழாய்வுப் பெருவிழா 26.02.2020 – புதன் முற்பகல் நிகழ்வில் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் பொறுப்பாளராக உள்ள பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அறக்கட்டளையில் பேராசிரியர் இராம.குருநாதன், ‘மேடை மின்னல்கள் (ஔவையின் அருந்தமிழ்ப் பொழிவுகள்’) என்ற தலைப்பில் பேசுகையில் முனைவர் ஔவை நடராசனின் உரைத்திறம் பெருமை வாய்ந்ததாகும். அவரின் இலக்கிய உரைகளில் பல மேடைகளில் மெல்லிய செந்தமிழ்ப் பூங்காற்றாக கடந்த 75 வருடங்களாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய நாடு முழுவதும், அயலகத் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ் வீசிக்கொண்டிருக்கிறது. அவருடைய உரை விளக்கங்கள் ஆழமானவை, அகலமானவை. அவருடைய திருப்பாவை, திருவெம்பாவை, உரைகளை வானொலியில் தேனொலியாக பாய்ந்த நேரத்தில் புரட்சித் தலைவர் அந்த உரைகளைக்கேட்டு மெய்மறந்து சிலிர்ந்து “தமிழே” என்றுதான் ஔவை நடராசனை அழைப்பது வழக்கமாயிற்று. அதுவே அவருடைய பணி உயர்வுக்கும் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அரசு செயலாளர் பதவிக்கும் அடித்தளமிட்டது.
பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களுடைய ஆங்கில உரையின் திறத்தைக் கேட்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழத்தில் துணைவேந்தராக நியமனம் செய்வதற்கும் வழிகோலியது. பேராசிரியர் இராம. குருநாதன் தன்னுடைய உரையில் வருங்காலத்தில் தமிழ்ப்பணியை மென்மேலும் சிறக்கச் செய்ய எல்லா வகையிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் மட்டுமே தான் இயலும் என்று புகழாராம் சூட்டினார். முனைவர் ஔவை நடராசனை போன்ற பல தமிழில் சிறந்த பேச்சாளர்களின் உரைகளை அமெரிக்க பல்கலைக் கழகங்களில் உள்ளதை போல இங்கும் நிறுவனத்தின் வாயிலாக ஆவணப்படுத்தமாறு கேட்டுக்கொண்டார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவில் இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர், திரு.மோகன் சுந்தர் பாண்டியன் அவர்கள் ‘பிரம்ம ஞானமும், பிரம்ம ஞான சங்கமும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். அதில் அடையாரில் அமைந்துள்ள பிரம்மஞான சங்கத்தின் தோற்றம் குறித்தும், அங்கு நடைபெறக் கூடிய பணிகள் குறித்தும், சிறந்ததொரு கருத்துக்களை எடுத்துக் கூறினார்