திருமூலர் ஆய்விருக்கையின் 5ஆம் ஆண்டுத் தொடக்க விழா

நிகழ்வு நாள் : 23.02.2020

தமிழ்த்தாய் 72, தமிழாய்வுப் பெருவிழா முற்பகல் நிகழ்வில் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் பொறுப்பாளராக உள்ள திருமூலர் ஆய்விருக்கையின் 5ஆம் ஆண்டுத் தொடக்க விழாவும் மற்றும் 1. இரா.பாலகிருஷ்ணன் அவர்களின் “ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை” 2. திருமதி ச.தனலட்சுமி அவர்களின் “தயவுநெறி” 3. திரு. இரமேஷ்ரிஷி அவர்களின் “திருமந்திரம்- சித்தர் பாரம்பரியம்” 4. டாக்டர் க.நெல்லைவசந்தன் அவர்களின் “குறளும் கோளும்” 5. திரு.கோ.சரவணன் அவர்களின் “ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” ஆகிய தலைப்புகளில் சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. பிற்பகல் திரு. கே.ஸ்ரீராம் அவர்கள் பொறுப்பாளராக உள்ள ஞானத்தமிழ் இலக்கிய ஆராய்ச்சி ஆய்விருக்கை சார்பாக “ஞானத்தமிழ்” என்ற தலைப்பில் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், திரு.கே.பார்த்தசாரதி மற்றும் திரு.ஏ.ஆர்.சந்திரசேகர் ஆகியோரின் சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன.