கழகம் வ.சுப்பையாபிள்ளை அறக்கட்டளை, தினமலர் இராம சுப்பையர் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 21.02.2020

தமிழ்த்தாய் 72, தமிழாய்வுப் பெருவிழா 21.02.2020 – வெள்ளி முற்பகல் நிகழ்வில் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் பொறுப்பாளராக உள்ள கழகம் வ.சுப்பையாபிள்ளை அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு (ம) நூல் வெளியீடு நிகழ்வில் “பள்ளு இலக்கியங்களில் வேளாண்மை மரபுகள்” எனும் தலைப்பில் முனைவர் சே.கரும்பாயிரம் செம்மொழி மத்திய நிறுவனம், இளநிலை ஆராய்ச்சி அலுவலர் சொற்பொழிவு ஆற்றினார். பிற்பகல் தினமலர் இராம சுப்பையர் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவும் (ம) நூல் வெளியீடு நிகழ்வில் “தமிழில் சொற்பொருள் மயக்க நீக்கத்திற்கான வழிமுறைகள்” எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில் முனைவர் த.யோகா, உதவிப் பேராசிரியர், திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார். முனைவர் பட்ட ஆய்வாளர், சி.ஜெயமுருகன் நன்றியுரை ஆற்றினர்.