தினமணி அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 05.02.2019

தினமணி அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் 5.2.2019 அன்று அறக்கட்டளைப் பொறுப்பாளரும் பொழிவாளருமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ் மொழி (ம) மொழியியல் புல உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் ‘குறுந்தொகையில் பாடல் பொருள் நுட்பம்- ஒரு மொழிக்குறியீடு’ என்னும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். குறுந்தொகைப் பதிப்பு வரலாறு ஓரெழுத்துஒருமொழி. ஒருசொல் பலபொருள், ஒருபொருள் பல சொற்கள், கருத்தாடலில் சொல்லும் பொருளும் வேறுபட்டு நிற்கும் நிலை, 45 பெண்பாற் புலவர்களில் 21 புலவர்கள் குறுந்தொகையைப் பாடியவர்கள். அவர்களின் பாடல்களின்மொழிச்செறிவு, இன்றைய பயன்பாட்டில் உள்ள கருத்தலகுகளின் வினைவேர் குறுந்தொகை என்பதையும் புலவர்களின் உணர்வு அழுத்தத்தின் வெளிப்பாடே பொருள் நுட்பமும் சொல் இரட்டிப்பும் போன்ற இன்னும் பல அரிய செய்திகளை குறுந்தொகையின் மூலம் தெளிவுற எடுத்துரைத்தார்ள. இந்நிகழ்வுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார். நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆசைக்கண்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். ஆய்வாளர் திருமதி மாலதி தொகுத்து வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வாளர் நா. பெரியசாமி நன்றியுரையாற்றினார். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் சொற்பொழிவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.