திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 18.02.2020

திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளை நூல்வெளியீட்டு விழாவில் 18.02.2020, தொன்ம மறுவாசிப்புகளின் ஆழமும் விரிவும் எனும் தலைப்பிலான நூலினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வெளியிட, நிறுவன பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் திரு. பெ.குருசாமி, முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முனைவர் கே.பானுமதி, நூலாசிரியர் முனைவர் இரா. வெங்கடேசன், முனைவர் து.ஜானகி, மு.ஜெயப்பிரியா ஆகியோர்.