வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை, இராமலிங்க அபிராமி அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 17.02.2020

தமிழ்த்தாய் – 72, 17.02.2020 – திங்கள் நிறுவன ஆய்வு அலுவலர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்கள் பொறுப்பாளராக உள்ள வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை பொழிவும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஷன் கல்வி இயக்குனர், டாக்டர் என். ஏ. பெருமாள் அவர்கள் வேதாத்திரிய தத்துவங்களை “வேதாத்திரிய அறிவியல்” என்ற ஒரு புதிய கோணத்தில் விளக்கினார். துகளுக்கு அடிப்படையான மூலப்பொருள் சுத்தவெளிதான் என்றும் அதுவே பிரபஞ்சத்தின் தொடக்க நிலை என்றும் அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டால் அனைத்தும் விளங்கும் என்ற வேதாத்திரிய கருத்தை அறிவியல் பார்வையில் விளக்கினார். பிரபஞ்சம் தொடங்கியது. ஒரு புள்ளியின் வெடிப்பில் அல்ல என்றும் சுத்தவெளியின் தன்மாற்றம் தான் பிரபஞ்மாக மலர்ந்துள்ளது. இதை இன்றைய அறிவியல் அறிஞர்கள் எடுத்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர். கோ. விஐயாராகவன் அவர்கள் முன்னிலை வகிக்க. இவ் அறக்கட்டளையின் பொறுப்பாளர் முனைவர் தி.மகாலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் பொது செயலாளர் முனைவர் எஸ். சேகர் அவர்கள் தலைமையேற்க, வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியின் செயலாளர் பேராசிரியர் திருமதி. அ. அன்னபூரணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் விஷன் கல்வி இயக்குனர், டாக்டர் என். ஏ. பெருமாள் அவர்களின் “வேதாத்திரிய அறிவியல்” என்ற நூல் வெளியிடப்பட்டது. அதுப்போலவே வேதாத்திரிய யோகா கல்லூரியின் முதல்வர் முனைவர் ஸ்ரீ. ஜெயப்பிராகஷ் அவர்களின் “திருவேதாத்திரிய குறள்” நூலும் வெளியிடப்பட்டது. இந்நூலில் வேதாத்திரிய தத்துவங்களை இரண்டடியில் திருக்குறளைப் போல் உருவாக்கியுள்ளார். வேளச்சேரி அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி ச. ஞானசம்பந்தன் நன்றியுரை கூறினார். பிற்பகல் நிகழ்வாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வறிஞர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்கள் பொறுப்பாளராக உள்ள இராமலிங்க அபிராமி அறக்கட்டளை சார்பில் சென்னை, இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சா.லோகேஷ் அவர்களின் “தன்னிகர் இல்லாத் தலைவன் சிவபெருமான்” என்ற தலைப்பில் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது. சிவபெருமானின் தோற்றம், பொலிவு, அட்டவீரட்டச் செயல்கள் பிரம்மா, திருமால் தொடங்கிப் பலருக்கும் அருளியல் செயல்கள் என்பவை பற்றியும், திருமந்திர தேவாரப் பாடல்கள் மூலம் எப்படிப் பாடப் பெற்றுள்ளது என்பதையும் உரை நிகழ்த்தி அதனைக் கோயில் சிற்பங்களைக் கொண்டு காணொளி காட்சி மூலம் பார்வையாளருக்கு விளக்கினார். மேலும் இச் செயல்களைச் சிவபெருமான் நிகழ்த்திய திருத்தலங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். சைவநெறி தமிழப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை விளக்குவதாக உரையின் சாரம் அமைந்தது.¬¬ இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான மாணவர்கள் ஆய்வு அறிஞர்கள் மனவளக்கலை அன்பர்கள் பலர் கலந்துகொண்டனர்
மேலும், மொரிஷியஸ் நாட்டு முனைவர் ஜீவேந்திரன் சீமான் அவர்களின் அவர்கள் எழுதிய ‘Thirukural A Soul-Inspired Pathway to Virtuous Living (Vol. 1) என்னும் நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்நூல் அறத்துப் பாலில் உள்ள முதல் 24 அதிகாரங்களை ஆங்கிலம், தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழியெயர்த்து விளக்கியிருக்கிறார். இந்நிகழ்வினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்று மொழி இனம் மதம் நாடு கடந்து யார் எம்மொழியில் பயின்றாலும் அம்மொழிகளுக்கும் அவர்களுக்கும் ஏற்றார்போல் பொருளினைத் தருவது என்று திருக்குறளினைப் பாராட்டினார்.