புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை , உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம்

நிகழ்வு நாள் : 14.02.2020

தமிழ்த்தாய் – 72, 14.02.2020 – வெள்ளி நிகழ்வில் நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புல முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் பொறுப்பாளராக உள்ள டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றிட, “தண்டியலங்கார அணிகளும் ஐந்திலக்கண நூல்களின் அணிகளும் – ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. இந்துபாலா அவர்களின் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது.
பிற்பகல் நிகழ்வாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் போகர் ஆய்விருக்கை தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம் சார்பில் மதுரை போகர் சாம்ராஜ்ஜியம், இயற்றமிழ் மருத்துவ நிபுணர், திரு. ர.பாட்லீஸ் கண்ணன் அவர்களின் “தமிழும் வாழ்வும்” எனும் தலைப்பில் அமைந்த சிறப்புச் சொற்பொழிவும் நடைபெற்றது. இதில் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வி புவனேஸ்வரி அவர்கள் நன்றி நவின்றார்.