புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை, ஏ.வி.எம். ஜபார்தீன் அறக்கட்டளை, ச.வே.சு. அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 13.02.2020

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் 13ஆம் நாள் (13.02.2020) நிகழ்வாக, முற்பகல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் “ஆய்வு அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் தஞ்சாவூர் ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் செ.வில்சனும், நண்பகல் ஏ.வி.எம். ஜபார்தீன் அறக்கட்டளை சார்பில் “இசுலாமிய இலக்கியத்தில் சமயச் சமூக நல்லிணக்கம்” என்ற தலைப்பில் திருப்பத்தூர் அல் அமீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச.சந்திரசேகரனும், பிற்பகல் ச.வே.சு. அறக்கட்டளை சார்பில் “குழந்தைகளின் மொழி வளர்ச்சியும் மொழியியல் நோக்கும்” என்ற தலைப்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் முனைவர் ர. லலிதா ராஜா ஆகியோரின் சொற்பொழிவுகளும் நூல்வெளியீடுகளும் நடைபெற்றன.

படச்செய்தி : 13.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய் 72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடைபெற்ற அறக்கட்டளை சொற்பொழிவில் பொழிவாளர் முனைவர் ச.சந்திரசேகரன் உடன் முனைவர் செ.வில்சன், முனைவர் கா.காமராஜ், முனைவர் ர. லலிதா ராஜா, முனைவர் க.சுசீலா, சிறப்பு விருந்தினர் முனைவர் த.செந்தில்குமார், இ.க.ப., உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், முனைவர் ஆ.மணவழகன்.