பெரியார் ஈ.வெ.ரா.நாகம்மை அறக்கட்டளை, முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை, பெரியார் மணியம்மை அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 12.02.2020

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் 12ஆம் நாள் (12.02.2020) நிகழ்வாக, முற்பகல் பெரியார் ஈ.வெ.ரா.நாகம்மை அறக்கட்டளை சார்பில் “இணையமும் தமிழும்” என்ற தலைப்பில் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரமும், நண்பகல் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை சார்பில் “மொழி வளர்ச்சிக்கு நடையின் பங்களிப்பு” என்ற தலைப்பில் சிவகங்கை அரசுக் கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் சா.மு.ஜெய்னம்பு பர்வினும், பிற்பகல் பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பில் “ஐங்குறுநூறு உரிப்பொருள்” என்ற தலைப்பில் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு.ஜெகதீசன் ஆகியோரின் சொற்பொழிவுகளும் நூல்வெளியீடுகளும் நடைபெற்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நூல்களை வெளியிட, நிறுவன உதவிப்பேராசிரியர்கள் முனைவர் க.சுசீலா, முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.