வைணவ இருக்கையின் நான்காம் ஆண்டு துவக்க விழா

நிகழ்வு நாள் : 02.02.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வு பெருவிழாவின் இரண்டாம் நாள் (02.02.2020) நிகழ்வில் நிறுவன வைணவ ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவும் (ம) வைணவ இருக்கையின் நான்காம் ஆண்டு துவக்க விழா, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்பு இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இலங்கையின் உரும்பிராய் மற்றும் காரைத்தீவு நகரங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெறவுள்ள திருவள்ளுவர் சிலைகள் ஊர்திப் பயணம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையேற்று விழா சிறப்புரையாற்றினார். உடன் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், அம்மா தமிழ்ப் பீடத்தின் நிறுவனர் திரு.ஆவடிக்குமார், இருதய மருத்துவர் திரு. வி. சொக்கலிங்கம், சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துறைத்தலைவர் பேரா.உ.வேங்கடகிருஷ்ணன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சி.நம்மாழ்வார் மற்றும் உடையார் கோயில் குணா.