தமிழ்த்தாய் 72 - தமிழாய்வுப் பெருவிழா - தொடக்க விழா

நிகழ்வு நாள் : 01.02.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் மாதமான பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழாய்வுப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த வருடம் மாண்புமிகு அம்மா அவர்களின் 72ஆவது பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, தமிழ்த்தாய் - 72 பெருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் தொடக்க நிகழ்வில், தென்சென்னைத் தொகுதி மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயவர்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், திரைப்படப் பாடலாசிரியர் முத்துலிங்கம், அம்மா தமிழ்ப் பீடத்தின் நிறுவனர் ஆவடிக்குமார், பேராசிரியர் முனைவர் பெ.செல்வகுமார், இளந்தமிழர் இலக்கியப் பேரவை நிறுவனர் மு.முனீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.