உலக மொழிபெயர்ப்பு நாள் – 30.09.2019

நிகழ்வு நாள் : 30.09.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
உலக மொழிபெயர்ப்பு நாள் – 30.09.2019
“இணைப்பிய நுண் மொழியாக்கம்”

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், செப்டம்பர் 30, உலக மொழிபெயர்ப்பு நாளை முன்னிட்டு 30.09.2019 இன்று திங்கட்கிழமை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் தலைமையில், பெங்களூரு ரிவரி மொழி தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் சார்பில் “இணைப்பிய நுண் மொழியாக்கம்” என்ற காட்சித்திரை ஒளிப்பரப்பப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தமிழ்மொழி (ம) மொழியியல் புல இணைப் பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றிட, மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் வாழ்த்துரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகம்-கே.பி.சந்திரசேகர் ஆய்வு மையம் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குநர் முனைவர் எல். ஷோபா அவர்கள் சிறப்புரையாற்றிட, ரிவரி மொழி தொழில்நுட்பவியல் நிறுவன, நிறுவனர் மற்றும் தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் திரு. விவேகானந்த பாணி விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்வில் ரிவரி மொழி தொழில்நுட்பவியல் நிறுவனத் துணைத் தலைவர் திரு. வினய் ராஜ், மொழியாக்க மென்பொருள் தலைவர் திரு. சாய் கிரண், மண்டல விற்பனை மேலாளர் திரு. முகமது நயீம், நிறுவன அயல்நாட்டுத்தமிழர் புல உதவிப் பேராசிரியர் து.ஜானகி, தமிழ் அநிதம் (அமெரிக்கா) தலைவர் மற்றும் நிறுவனர் - திருமதி சுகந்தி நாடார், வேல்ஸ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேல்ஸ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்
கி. துர்காதேவி அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவனப் பேராசிரியர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.