51ஆவது ஆளுகைக்குழுக் கூட்டம்

நிகழ்வு நாள் : 20.09.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன
51ஆவது ஆளுகைக்குழுக் கூட்டம்
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 51ஆவது ஆளுகைக்குழுக் கூட்டம் 20.09.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழியல் அரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆளுகைக்குழுத் தலைவரும் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான திரு. க. பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் “மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்றுவரும் சீர்மிகு ஆட்சியில், தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 344.24 இலட்சம் மதிப்பிலான திட்டங்களைத் தந்து, பல்வேறு திட்டப் பணிகளின் மூலம் தமிழ் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊக்கம் அளித்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு நிறுவன ஆளுகைக்குழுவால் நன்றி பாராட்டித் தீர்மானம் இயற்றப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆளுகைக்குக் குழுத் துணைத் தலைவர்களான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் (மு.கூ.பொ.) திரு. ஆ.கார்த்திக், இ.ஆ.ப., மாண்பமை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன், மாண்பமை மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.கிருஷ்ணன், மாண்பமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பிரதிநிதியாக பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வெங்கடேசன், மாண்பமை சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பிரதிநிதியாக பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன் ஆகியோரும் ஆளுகைக் குழு உறுப்பினர்களான தமிழ்நாடு அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளரின் பிரதிநிதியாக நிதித் துறை துணை செயலாளர் திருமதி வனிதா, மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இயக்குநரின் பிரதிநிதியாக அதன் துணை இயக்குநர் திருமதி உமாராணி ஆகியோரும் ஆளுகைக் குழுவின் உறுப்பினர் செயலரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் ஆகியோரும் கலந்துகொண்டு நிறுவனத்தின் பொருண்மைகள் குறித்தும், வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்கள் குறித்தும் கருத்துரைகள் வழங்கினர். கடந்த 8 ஆண்டுகளாக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அராசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழாய்வு வளர்ச்சிப்பணிகளுக்கு ரூ. 989 இலட்சம் அளவிற்கு திட்டங்களை ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி பாராட்டி தீர்மானமும், இவ்வாண்டு திசம்பர் திங்களில் "உலகத் தமிழிசை மாநாடு" நடத்துவதற்கும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை 2020 (1970-2020) சிறப்புடன் கொண்டாடுவதற்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. நிகழ்வின் இறுதியில் நிறுவன சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலப் பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் நன்றி நவின்றார்.