“பூச்சாண்டி” திரைப்படம் சிறப்புக் காட்சி மற்றும் மலேசியத் தமிழர்கள் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 29.07.2019

“பூச்சாண்டி” திரைப்படம் சிறப்புக் காட்சி மற்றும் மலேசியத் தமிழர்கள் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம் சார்பில் “பூச்சாண்டி” எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி மற்றும் மலேசியத் தமிழர்கள் சொற்பொழிவு நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இதில் மலேசியா நாட்டு திரைப்பட இயக்குநர் திரு. விக்னேஸ்வரன், மற்றும் மலேசியா நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் திரு.முனியாண்டி ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர், முனைவர் கு.சிதம்பரம், வரவேற்புரை வழங்க, மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், வாழ்த்துரை வழங்கினார், முனைவர் து.ஜானகி, உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம் நன்றியுரை ஆற்றினார்.
[படச்செய்தி: வலமிருந்து இடமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் தலைமையுரை ஆற்றுகிறார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் கோலாலம்பூர் திரைப்படத் தயாரிப்பாளர் திரு.முனியாண்டி, கோலாலம்பூர் திரைப்பட இயக்குநர் திரு. விக்னேஸ்வரன். மற்றும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஔவை அருள்.]