உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் அரிய சுவடிகள் ஒப்படைப்பு

நிகழ்வு நாள் : 25.01.2019

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன
சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் மருத்துவம், தமிழியல், சமயம் சார்ந்த ஆயிரத்திற்கும்
மேற்பட்ட சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது அறிஞர்
பெருமக்களாலும் சுவடியியலில் பணியாற்றும் பேராசிரியர்களாலும் தன்னார்வம் மிக்க
தமிழறிஞர்களாலும் அரிய ஓலைச்சுவடிகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுச் சுவடிகள்
பாதுகாப்பு மையத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப் படுகின்றன.
அச்சுவடிகள் சீராக்கம் செய்யப்பட்டு முறையாக அட்டவணைப் படுத்தப்பட்டுச்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்க்
கம்பன் கழகத்தின் செயலாளர் “தமிழ்ச்செம்மல்” முனைவர் இரத்தின நடராசன்
அவர்களின் மேற்பார்வையில் செங்கல்பட்டு நகரைச் சார்ந்த அரிமா ஆளுநர்
எம்.ஜெ.எப். முருகப்பா அவர்கள், தன் முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த ஞானம்,
பாகவதம், சிவபுராணம், அருணாச்சலபுராணம் ஆகிய பழங்கால ஓலைச்சுவடிகளை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைத் தமிழ் பயிலும்
வே.து.வெற்றிச்செல்வன் அவர்கள் மூலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்
அவர்களிடத்தில் இன்று ஒப்படைத்தார். உடன் சுவடிகள் பாதுகாப்பு மையப்
பொறுப்பாளர் முனைவர் அ.சதீஷ் அவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு
மாணவர்கள்.