உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாரதிதாசன் : தமிழின் பன்மைவெளி தேசியக்கருத்தரங்கு

நிகழ்வு நாள் : 10.04.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாரதிதாசன் : தமிழின் பன்மைவெளி தேசியக்கருத்தரங்கு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பாரதிதாசன் : தமிழின் பன்மைவெளி தேசியக்கருத்தரங்கு

செய்திக் குறிப்பு

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 10.04.2019 இன்று முற்பகல் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கையின் சார்பில் 129ஆவது பிறந்த நாள் (ம) 55ஆவது நினைவு நாளை முன்னிட்டு “பாரதிதாசன் : தமிழின் பன்மைவெளி” என்ற பொருண்மையில் தேசியக்கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கையின் பொறுப்பாளரும் தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலத்தின் உதவிப்பேராசிரியருமான முனைவர் மணிகோ. பன்னீர் செல்வம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முல்லைச்சரம் இதழ் ஆசிரியர் கலைமாமணி கவிஞர் பொன்னடியான் அவர்கள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

“பாவேந்தரின் இலக்கியப் பதிப்பு வரலாறு” எனும் தலைப்பில் தமிழ்ச்செம்மல் புலவர் வே. பிரபாகரன் அவர்களும் “பாரதிதாசனில் வெளிப்படும் இயற்கை நீதி” எனும் தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அன்புமான் அப்ரார் அவர்களும் “சுயமரியாதை நிர்மாணப் பணியும் புதுவை முரசு இதழும்” எனும் தலைப்பில் முனைவர் சிவ. இளங்கோ அவர்களும் “பாரதிதாசனின் பெண் கருத்துருவாக்கம்” எனும் தலைப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்களும் சொற்பொழிவினை நிகழ்த்தினர். பிற்பகல் நடைபெற்ற நிறைவு விழாவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் நிறைவுப் பேருரையாற்றிட நிறுவன முதுகலைத் தமிழ் மாணவர் திரு. சி. சிவப்பிரகாசம் அவர்கள் நன்றி நவின்றார். நிகழ்ச்சியினை நிறுவன முதுகலை மாணவர் திரு. இரா. மோகன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் நிறுவன முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பல்வேறுத்துறைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

படச் செய்தி : இடமிருந்து வலமாக தொகுப்பாளர் மோகன வசந்த், உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குநர் முனைவர் க.மு.சேகர், முனைவர் சிவ. இளங்கோ, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம், முனைவர் நா.சுலோசனா, திரு. அன்புமான் அப்ரார்