உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அரிய நூல்கள் மின் எண்மம் - நிறுவன வலைத்தளத்தில் 2,18,558 பக்கங்கள் பதிவேற்றும் நிகழ்ச்சி

நிகழ்வு நாள் : 09.03.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள
அரிய நூல்கள் மின் எண்மம் - நிறுவன வலைத்தளத்தில்
2,18,558 பக்கங்கள் பதிவேற்றும் நிகழ்ச்சி

பாரத ரத்னா புரட்சித் தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா
மற்றும்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள
அரிய நூல்கள் மின் எண்மம் - நிறுவன வலைத்தளத்தில்
2,18,558 பக்கங்கள் பதிவேற்றும் நிகழ்ச்சி

தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2018-2019ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்த “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களை மின்எண்மம் செய்யும் (Digitalize) பணிக்கு ரூ. 39,34,000/- நிதி ஒதுக்கிடு” செய்யப்பட்டு 1156 அரிய நூல்களின் 2,18,558 பக்கங்கள் மின்எண்மம் செய்யப்பட்டு சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 09.03.2019 இன்று மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க.பாண்டியராஜன் அவர்கள் தலைமையில், தென்சென்னைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முதுநிலை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் மற்றும் கலைமாமணி, செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி.ஜெயக்குமார் அவர்கள் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் ஆய்வு மாணவர்கள் பயன்படும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வைத்தார்.

முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நூலகக் கட்டட வளாகத்தில் கலைமாமணி, செவாலியர், டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களால் அமைத்துத்தரப்பட்ட புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி.ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்து சிறப்புறை யாற்றினார்.

இந்நிகழ்ச்சிகளில் வருகைப்புரிந்த அனைவரையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்றோர். நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவன முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பல்வேறுத்துறைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.