தமிழ்த்தாய் 71 – தமிழாய்வுப் பெருவிழாவின் 28வது நாள் விழா

நிகழ்வு நாள் : 28.02.2019

தமிழ்த்தாய் 71 – தமிழாய்வுப் பெருவிழாவின் 28வது நாள் விழா

தமிழ்த்தாய் 71 – தமிழாய்வுப் பெருவிழாவின் 28வது நாள் விழாவாக 28.02.2019 இன்று “அம்மாவின் ஆட்சியில் அருந்தமிழ் வளர்ச்சி” மற்றும் “மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா” அறக்கட்டளைகளின் சார்பாக சொற்பொழிவுகள் மற்றும் நூல்கள் வெளியீடு நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களும் மேனாள் உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர்களான முனைவர் கா.மு.சேகர், முனைவர் க.பசும்பொன் ஆகியோரும் பொழிவாளர்களாக முனைவர் க.இரமேஷ், தமிழ்ச்செம்மல் வே.பிரபாகரன், முனைவர் குணசுந்தரி மற்றும் அறக்கட்டளைகளின் பெறுப்பாளரான முனைவர் வி.இரா.பவித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

படச்செய்தி : உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், முனைவர் வி.இரா.பவித்ரா, முனைவர் குணசுந்தரி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், தமிழ்ச்செம்மல் வே.பிரபாகரன், உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குநர் முனைவர் க.பசும்பொன், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவர் சோலை ராஜா.