மலேசியா, சுல்தான் இட்ரிசு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் (ம) மாணவர்கள் உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியர்கள் (ம) மாணவர்கள் கலந்துரையாடல் - பண்பாட்டு பரிமாற்ற நிகழ்வு

நிகழ்வு நாள் : 16.09.2026

மலேசியாவின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் 24 மாணவர்கள் மற்றும் 2 பேராசிரியர்கள் 02.09.2026 முதல் 16.09.2026 வரை பண்பாட்டு பரிமாற்ற நிகழ்வுக்காக (Mobility & CSR) தமிழ்நாட்டிற்கு வருகைப்புரிந்துள்ளனர்.

இத்திட்டத்தின் இறுதி நாளான இன்று (16.09.2026) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை புரிந்து நிறுவனப் பேராசிரியர்கள் (ம) மாணவர்களுடன் பண்பாட்டு பரிமாற்றம் குறித்து கலந்துரையாடல் செய்தனர். பின்னர் மலேசியா மாணவர்கள் இங்குள்ள தமிழாய்வு சூழல்கள் குறித்தும், தங்கள் நாட்டில் தமிழ் மொழி, பண்பாடு பழக்க வழக்கங்கள் குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் நிறுவனப் பேராசிரியர்கள் மற்றும் நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டனர்.

படச்செய்தி : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (16.09.2026) மலேசியா, சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் (ம) மாணவர்களுடன் நிறுவனப் பேராசிரியர்கள் (ம) மாணவர்கள் பண்பாட்டு பரிமாற்றம் குறித்து கலந்துரையாடல் செய்தனர். இதில் பங்கேற்ற சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். உடன் மலேசியாப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர்கள் முனைவர் ஃபிராங்க்ளின் தம்பி ஜோஸ் செலிடஸ் டார்லிங் மற்றும் முனைவர் மனோன்மணி தேவி எம்.ஏ.ஆர். அண்ணாமலை, நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் து.ஜானகி மற்றும் முனைவர் கு.சிதம்பரம்.