பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழா

நிகழ்வு நாள் : 15.09.2026

தமிழ் வளர்ச்சித்துறையின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (15.09.2026) மேனாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம் பிறந்த நாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் திருநாளாக கொண்டாடப்பட்டது.

இதில் தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் கலந்துகொண்டு நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநரால், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் நாள் முதல் அக்டோபர் 14ஆம் நாள் வரை ஒரு மாத காலத்திற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் அதன் வெளியீடுகள் 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை சிறப்புக் கழிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

படச்செய்தி:
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம் பிறந்தநாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாளை முன்னிட்டு இன்று (15.09.2026) நிறுவன வளாகத்திலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது, உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.