தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான 20 நாட்கள் "மொழியியல் நுணுக்கப் பயிற்சி" (27.07.2026 முதல் 21.08.2026 வரை) நிறைவு விழா

நிகழ்வு நாள் : 21.08.2026

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான 20 நாட்கள் "மொழியியல் நுணுக்கப் பயிற்சி" (சூலை 27 முதல் ஆகஸ்டு 21 வரை) நடைபெற்றது. இப்பயிற்சியில் ஐம்பது தமிழாசிரியர்களுக்கு 43 பொருண்மைகளில் 41 கல்வியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் இன்று (21.08.2026) பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளரும் நிறுவன உதவிப் பேராசிரியருமான முனைவர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிறுவனத்தின் இயக்குநர் (கூ.பொ.,) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளரும் நிறுவன இணைப் பேராசிரியருமான முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் புத்தாக்கப் பயிற்சியின் அறிக்கையினை அளித்திட, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கி. கருணாகரன் அவர்கள் பயிற்சி பெற்ற தமிழாசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி நிறைவுரையாற்றினார். பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளரும் நிறுவன உதவிப் பேராசிரியருமான முனைவர் க.சுசீலா அவர்கள் நன்றி நவின்றார்.