தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான 20 நாட்கள் "மொழியியல் நுணுக்கப் பயிற்சி" (27.07.2026 முதல் 21.08.2026 வரை) தொடக்கவிழா

நிகழ்வு நாள் : 27.07.2026

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான 20 நாட்கள் "மொழியியல் நுணுக்கப் பயிற்சி" (சூலை 27 முதல் ஆகஸ்டு 21 வரை) தொடங்கியது. இப்பயிற்சியில் ஐம்பது தமிழாசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். இப்பயிற்சியின் தொடக்கவிழாவில் பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளரும் நிறுவன உதவிப் பேராசிரியருமான முனைவர் க. சுசீலா அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிறுவனத்தின் இயக்குநர் (கூ.பொ.,) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளரும் நிறுவன இணைப் பேராசிரியருமான முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் புத்தாக்கப் பயிற்சியின் நோக்கவுரையாற்றினார். அரசு உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குநர் திரு. பொ. பொன்னையா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தமிழியல் பண்பாட்டுப் புல மேனாள் இயக்குநர் பேராசிரியர் சு. பாலசுப்பிரமணியன் (பாரதிபாலன்) புத்தாக்கப்பயிற்சியின் தொடக்கவுரையாற்றினார். பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளரும் நிறுவன உதவிப் பேராசிரியருமான முனைவர் நா.சுலோசனா அவர்கள் நன்றி நவின்றார். இப்பயிற்சியில் 50 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

படச்செய்தி: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான 20 நாட்கள் "மொழியியல் நுணுக்கப் பயிற்சி" (27.07.2026 முதல் 21.08.2026 வரை)யின் தொடக்கவிழாவில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தமிழியல் பண்பாட்டுப் புல மேனாள் இயக்குநர் பேராசிரியர் சு. பாலசுப்பிரமணியன் (பாரதிபாலன்) சிறப்பிக்கப்பட்டார். உடன் அரசு உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குநர் திரு. பொ. பொன்னையா, இணை ஒருங்கிணைப்பாளர் (ம) உதவிப் பேராசிரியர் முனைவர் க.சுசீலா, ஒருங்கிணைப்பாளர் (ம) இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், இணை ஒருங்கிணைப்பாளர் (ம) நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா ஆகியோர்.