கல்வெட்டியல், சுவடியியல் கோடைக்காலப் பயிற்சி வகுப்பு

நிகழ்வு நாள் : 07.07.2026

தமிழ்நாடு அரசு நிதி நல்கையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலம் சார்பில் கல்வெட்டியல் மற்றும் ஓலைச்சுவடிகள் குறித்த கோடைக்காலப் பயிற்சி வகுப்பு 15.06.2026 முதல் 07.07.2026 வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக 20 நாட்கள் நடைபெற்றது. தகைசால் தொல்லியல் அறிஞர்கள், தொல்லியல், சுவடியியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்களைக்கொண்டு, விண்ணப்பித்தவர்களில் 30 நபர்களும் சிறப்பு அழைப்பில் 20 நபர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். இதில் தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களைப் படிப்பது, சுவடிகளைப் பாதுகாப்பது, படியெடுப்பது, பதிப்பிப்பது ஆகியவை குறித்துப் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களை ஒரு நாள் களப் பயணமாக காஞ்சிபுரம் அழைத்து செல்லப்பட்டு அங்கு கோயில்களிலுள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் அதன் வடிவமைப்புகள் மற்றும் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இப்பயிற்சியின் நிறைவு விழா இன்று (07.07.2026) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் தலைமையுரையாற்றிட, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டு ஆய்வாளர் (ப.நி,), முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும் நிறுவன தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் கோ. பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி நவின்றார்.

படச்செய்தி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலம் சார்பில் கல்வெட்டியல் மற்றும் ஓலைச்சுவடிகள் குறித்த 20 நாட்கள் கோடைக்காலப் பயிற்சி வகுப்பு 15.06.2026 முதல் 07.07.2026 வரை நடைபெற்றது, இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு 07.07.2026 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டு ஆய்வாளர் (ப.நி,), முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும் நிறுவன தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் கோ. பன்னீர்செல்வம் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டோர்.