அறிஞர்கள் அவையம் - நிகழ்வு - பன்னிரண்டு தமிழ்நாடு: வரலாறு மற்றும் தொல்லியல் நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்

நிகழ்வு நாள் : 10.03.2026

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் நிகழவேண்டியவை குறித்தும்" அறிஞர்கள் உரையாடும் களமாக "அறிஞர்கள் அவையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு 29.05.2025 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு பதினொரு நிகழ்வுகள் முடிந்த நிலையில், தற்போது பன்னிரண்டாவது நிகழ்வாக “தமிழ்நாடு: வரலாறு மற்றும் தொல்லியல் நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும் - நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்” என்ற பொருண்மையிலான கலந்துரையாடல் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத் தரைதளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக் கூடத்தில் இன்று (10.03.2026) காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புல இணைப்பேராசிரியருமான முனைவர் அ. சதீஷ் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து, 'தொன்மைக் குறியீடுகள்' எனும் பொருண்மையில் பேரா. கா. ராஜன் அவர்களும், 'தொல்லியல் ஆய்வுகளின் வழி மீட்டெடுத்த தமிழியல் வரலாறுகளும் மீள நிகழவேண்டிய ஆய்வுகளும்' எனும் பொருண்மையில் முனைவர் ஆ. பத்மாவதி அவர்களும், ‘தமிழ்ப்பண்பாட்டு ஆவணங்களைப் பிற இந்திய மாநிலங்களில் கண்டுபிடித்தல்' எனும் பொருண்மையில் முனைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களும், ‘தொல்லியல் ஆவணங்களின் காலக்கணிப்பு முறைகள்' எனும் பொருண்மையில் முனைவர் இரா. சிவானந்தம் அவர்களும், ‘தொல்லியல், கடல்சார் தொல்லியல் ஆய்வுகள்' எனும் பொருண்மையில் பேரா. வீ. செல்வகுமார் அவர்களும், ‘தமிழகக் காசுகள்' எனும் பொருண்மையில் திரு. ஆறுமுகம் சீதாராமன் அவர்களும், ‘தொல்லியல் மேற்பரப்பாய்வுகள்' எனும் பொருண்மையில் முனைவர் யத்தீஸ் குமார் அவர்களும், ‘Prehistoric Tamil Nadu' எனும் பொருண்மையில் பேரா. சாந்தி பப்பு அவர்களும், ‘தொன்மக் கூறுகள் - கலைவடிவங்கள் குறித்த ஆய்வுகள்' எனும் பொருண்மையில் திரு பா. ஆசைத்தம்பி அவர்களும் உரைகளை நிகழ்த்தினர்.

இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.