தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு - 11

நிகழ்வு நாள் : 06.03.2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறையுடன் இணைந்து நடத்திய தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர் நிகழ்வு-11, 06.03.2026 இன்று முற்பகல் 11:00 மணிக்கு பவளவிழா அரங்கம், மெரினா வளாகத்தில் நடைபெற்றது.

சென்னைப் பல்கலைக்கழகம், திருக்குறள் ஆய்வு மையம் மற்றும் தமிழ்மொழித் துறை தலைவர் (பொ.), உதவிப்பேராசிரியர் முனைவர் வாணி அறிவாளன் அவர்கள் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் நோக்கவுரையாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறை தலைவர் பேரா. முனைவர் ய. மணிகண்டன் அவர்கள் முன்னிலையுரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரையாற்றிட, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேரா. முனைவர் கோ. பழனி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத் துணைத் தலைவர், புதுவைப் பல்கலைக்கழக ஆய்வறிஞர், ஆங்கிலத்துறை பேராசிரியர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னைத் தலைவர், முனைவர் ப.மருதநாயகம் அவர்கள் ‘தொல்காப்பியம் போற்றும் கவிதையியல்-ஒப்புநோக்கில்' எனும் தலைப்பில் பொழிவுரையாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழக கிறித்தவத் தமிழ் இலக்கிய இருக்கை (ம) தமிழ்மொழித் துறை, தலைவர் (பொ.) உதவிப் பேராசிரியர் முனைவர் வே.நிர்மலர்செல்வி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளிலும் இந்நிகழ்வு வலையொளி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.