தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு - 10 பொழிவுரை மற்றும் நூல் வெளியீடு

நிகழ்வு நாள் : 27.02.2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல்துறையுடன் இணைந்து நடத்திய தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர் நிகழ்வு-10, 27.02.2026 இன்று முற்பகல் 11:00 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல்துறை தலைவர், பேராசிரியர் உ. அலிபாவா அவர்கள் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப்பேராசிரியர் (ம) தேர்வுப் பொறுப்பு அலுவலர் முனைவர் ஆ. மணவழகன் அவர்கள் நோக்கவுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரையாற்றிட, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் இர. காளிதாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல்துறை மேனாள் துறைத்தலைவர், பேராசிரியர் அ. ஆலிஸ் அவர்கள் ‘பத்துப்பாட்டு : கருத்தும் வடிவமும்’ எனும் தலைப்பில் பொழிவுரையாற்றினார். பொழிவுரை நூலாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் ஜெ. சந்திரகலா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளிலும் இந்நிகழ்வு வலையொளி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.