தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு - 9

நிகழ்வு நாள் : 20.02.2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்துறை துறையுடன் இணைந்து நடத்திய தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர் நிகழ்வு-9, 20.02.2026 இன்று முற்பகல் 11:00 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்துறை மூத்த பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் சு. இராசாராம் அவர்கள் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சமூகவியல் கலை (ம) பண்பாட்டுப் புல உதவிப்பேராசிரியர், முனைவர் கா.காமராஜ் அவர்கள் நோக்கவுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.), அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், மதிப்புறு கர்னல் பேரா. க.ரவி ஆகியோர் தலைமையுரையாற்றிட, அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் பேரா. அ.செந்தில்ராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அழகப்பா அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மா. சிதம்பரம் அவர்கள் ‘பக்தி இலக்கியங்களில் தொல்காப்பிய மரபுத் தொடர்ச்சியும் நீட்சியும்’ எனும் தலைப்பில் பொழிவுரையாற்றிட, அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சொ.சுரேஷ் நன்றியுரையாற்றிட, அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப் பயிற்றுநர் முனைவர் சொ. அருணன் இணைப்புரையாற்றினார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளிலும் இந்நிகழ்வு வலையொளி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.