பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 18.02.2026

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் இன்று 18.02.2026 காலை 10.30 மணிக்கு தொடங்கியது நடைபெற்றது. இவ்விழாவில் திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ப.நி.), தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அவர்கள் தலைமையுரையாற்றினார், திரு. வே. இராஜாராமன் இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அவர்கள் முன்னிலை வகித்தார், தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திரு. கோபிநாத் ஸ்டாலின், இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து தமிழியல் ஆய்வில் பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் பங்களிப்பு என்ற பொருண்மையில் அமைந்த கருத்தரங்கில் பேரா. பா.ரா. சுப்பிரமணியன், திட்ட இயக்குநர், மொழி, சென்னை. பேரா. கி. நாச்சிமுத்து, மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், கேரளப் பல்கலைக்கழகம். பேரா. இரா. கோதண்டராமன், மேனாள் இயக்குநர், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம். பேரா. வீ. அரசு, மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், முனைவர் ம. இராசேந்திரன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மாலை 4.00 மணிக்கு மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் பேராசிரியரின் படத்தினைத் திறந்து வைத்து கருத்தரங்க நிறைவுப் பேருரையாற்றினார். அவர்தம் உரையில் பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாளையொட்டி (பிப்பிரவரி 18) இக்கருத்தரங்கில் கலந்துகொண்டமைக்கும், பேராசிரியரின் படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு அமைந்தமைக்கு பெருமகிழ்ச்சியடைந்ததாகவும், மேலும், அன்னாரின் தமிழ்ப்பணி, ஆளுமைத்திறன் மற்றும் அவர்தம் நெறியாளுகையின் கீழ் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் ச.வே.சுப்பிரமணியன் போன்ற பலர் இன்று தமிழ்க்கூறும் நல்லுலகில் தகைசால் அறிஞர்களால் திகழ்ந்ததை சுட்டிக் காட்டினார்.

விழாவில் இறுதியாக நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.