தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு - 8

நிகழ்வு நாள் : 30.01.2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையுடன் இணைந்து நடத்திய தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர் நிகழ்வு-8, 30.01.2026 இன்று முற்பகல் 11:00 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை தலைவர், பேரா. முனைவர் ந. வெங்கடேசன் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப்பேராசிரியர், முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நோக்கவுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.), அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் (ம) ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா. முனைவர் சு.அறிவுடைநம்பி ஆகியோர் தலைமையுரையாற்றிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேரா. முனைவர் இரா. சிங்காரவேல், அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையர் பேரா. முதுமுனைவர் அரங்க. பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் பேரா. முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் ‘தொல்காப்பியத்தில் தொல்பழமையும் புதுப்புதுமையும்’ எனும் தலைப்பில் பொழிவுரையாற்றிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.இரவி நன்றியுரையாற்றினார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளிலும் இந்நிகழ்வு வலையொளி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.