தொல்காப்பியர் சுழலரங்கம் : மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு - 7

நிகழ்வு நாள் : 23.01.2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் இணைந்து நடத்திய தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர் நிகழ்வு-7, 23.01.2026 அன்று முற்பகல் 11:00 மணிக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஜெ.செந்தில்வேல்முருகன் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புல உதவிப்பேராசிரியர், முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் நோக்கவுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் தலைமையுரையாற்றிட, திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ர.பாபு ஜனார்த்தனம், திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ம.செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பணி நிறைவு) நாட்டார் வழக்காற்றியல் துறை, முனைவர் ஆ.தனஞ்செயன் அவர்கள் ‘நாட்டார் வழக்காற்றியலில் ஈரிடைப்புல அணுகுமுறை’ எனும் தலைப்பில் பொழிவுரையாற்றிட, திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.பாமா நன்றியுரையாற்றினார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளிலும் இந்நிகழ்வு வலையொளி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.