பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக

நிகழ்வு நாள் : 29.04.2022

2021-2022ஆம் நிதியாண்டுக்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பில், பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில் பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக் கதை நூலாக வெளியிடுதல், பாரதியின் சிறந்த நூறுபாடல்களை தெரிவுசெய்து புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்று வெளியிடுதல், பாரதியின் படைப்புகள், பாரதி தொடர்பான ஆய்வுநூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுதல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டு, 29.04.2022 அன்று தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ் கவிஞர் நாள் விழாவில் மாண்புமிகு தொழில் துறை மற்றும் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு (ம) தொல்லியல் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டன.