தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு - 4

நிகழ்வு நாள் : 14.11.2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் பெரியார் பல்கலைக்கழகமும் இணைந்து தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் - தொடர் நிகழ்வு - 4இல் தொல்காப்பியம் சங்க இலக்கியம் இறைச்சி - உள்ளுறை ஒப்பீட்டாய்வு எனும் பொருண்மையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சு. வேலாயுதன் அவர்கள் வரவேற்புரையாற்றிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப்பேராசிரியரும் தொல்காப்பியர் சுழலரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் நா. சுலோசனா அவர்கள் நோக்கவுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (பணி நிறைவு) அவர்கள் தலைமையுரையாற்றிட, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிருவாகக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரா. சுப்பிரமணி, பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (மு.கூ.பொ.), பேராசிரியர் வை. ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொல்காப்பியம் சங்க இலக்கியம் இறைச்சி - உள்ளுறை ஒப்பீட்டாய்வு எனும் பொருண்மையில் பெரியார் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் - தமிழ்த்துறைத் தலைவர் பெ. மாதையன் அவர்கள் பொழிவுரையாற்றினார். பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, பேராசிரியர் இரா. வசந்தமாலை நன்றியுரையாற்றிட, தமிழ்த்துறை முனைவர்பட்ட ஆய்வாளர், கு.சுபத்ரா இணைப்புரையாற்றினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்திலும், தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளிலும் இந்நிகழ்வு வலையொளி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.