பேராசிரியர் எஸ். தனிநாயகம் அடிகளாரின் பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா

நிகழ்வு நாள் : 07.11.2025

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் 07.11.2025 அன்று தொல்காப்பியர் ஆய்வு இருக்கை வழி பேராசிரியர் எஸ். தனிநாயகம் அடிகளாரின் பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக நிறுவன இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறுவனத் தலைவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (பணி நிறைவு) அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர், திருமதி வே. அமுதவல்லி இ.ஆ.ப., (மு.கூ.பொ.) அவர்கள் நூலின் முதற் படியைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி இயக்ககம் இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் ஆய்வு இருக்கைப் பொறுப்பாளரும் நிறுவன இணைப்பேராசிரியருமான முனைவர் அ. சதீஷ் நூல் ஆய்வுரை நிகழ்த்திட, நூலின் மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ந. மனோகரன் ஏற்புரை வழங்கினார்.

நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் மு. சுந்தரலிங்கம் நன்றியுரையாற்றினார், இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.