உதவி இயக்குநர்களுக்கு துறைசார்ந்த பயிற்சி

நிகழ்வு நாள் : 08.10.2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தமிழ் வளர்ச்சித் துறையில் பதின்மூன்று உதவி இயக்குநர்கள் நேரடி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் இவர்களுக்கு 25.09.2025 முதல் 07.11.2025 வரை துறைசார்ந்த பயிற்சி அளித்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 08.10.2025 முதல் 10.10.2025 வரை பயிற்சிபெறும் இவர்களுக்கு, நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள் நிறுவனத்தின் பணிகள் குறித்து விளக்கிக்கூறினார். இந்நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர், நிறுவனப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.