டாக்டர் உ.வே.சா. அறக்கட்டளை சொற்பொழிவு (ம) நூல் வெளியீடு

நிகழ்வு நாள் : 11.09.2025

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் இன்று (11.09.2025) முற்பகல் டாக்டர் உ.வே.சா. அறக்கட்டளைச் சார்பில், "அகநானூற்று உரையியல் - இடைக்காலம் முதல் தற்காலம் வரையிலான அகநானூற்று உரை மரபு" எனும் பொருண்மையில் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது.

அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நிறுவன உதவிப்பேராசிரியருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றிட, நிறுவன இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றி நூலினை வெளியிட்டார். நூலாசிரியரும் பொழிவாளருமான மதுரை தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா. பரமசிவன், நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.

நிறுவன முதுகலை மாணவி அ.பவித்ரா நன்றியுரையாற்றிட, நிறுவன முதுகலை மாணவர் சி. பிரவின் அவர்கள் இணைப்புரையாற்றினார், இவ்விழாவில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.