பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 20.02.2019

பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளைச் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளைச் சொற்பொழிவுஇந்திய குடியுரிமைப் பணித்தேர்வுகளை அவரவர் தாய்மொழியில் எழுதச் சட்டம் கொண்டு வந்தவர் காமராசரே!

தமிழ்நாடு அரசு வழங்கிய காமராசர் விருதினைப் பெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் மற்றும் தமிழ் தேசியத் தலைவர் அய்யா பழநெடுமாறன் அவர்கள் தமிழ்த்தாய் பெருவிழா - 71 தொடர் சொற்பொழிவில் (20.2.2019) இன்று பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் என்ற அறக்கட்டளைத் தொடர்பாக இந்திய அரசியலில் பெருந்தலைவர் காமராசரின்பங்கு என்னும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார்.

சேரர், சோழர், பாண்டியர், வேளிர், பல்லவர், இசுலாமியர், நாயக்கர் ஆட்சிகளால் பிளவுபட்டிருந்தத் தமிழகத்தை ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் காமராசர். பல்வேறு மொழிகள் பேசக்கூடிய நாட்டை மொழிவழி மாநிலமாக மாற்றியவர். கல்வி வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றி அவர்தம் ஆட்சிக் காலத்தைப் பொற்கால ஆட்சிக்காலமாக மாற்றியவர். மாபெரும் தலைவர்களின் மதிப்பையும் பெருமையையும் பெற்றவர். நேருவிற்கு பின்னால் தலைவராக விளங்கக்கூடிய நன்மதிப்பைப் பெற்றவர். கிங்மேக்கர் என உலகத் தலைவர்களின் பாராட்டைப்பெற்றவர். அமெரிக்க பிரிட்டன் நாடுகளின் அழைப்பை ஏற்காத காமராசர் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே சென்றவர். 1965க்கு பிறகு ஆங்கிலத்திற்கு மாற்றாக அந்தந்த மாநில மொழியே ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். குடியுரிமைப் பணி தேர்வுகள் அவரவர் தாய்மொழியில் எழுதப்பட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவந்தவர். மதப்பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டவராக திகழ்ந்தவர். மொத்த வருவாயில் 25விழுக்காடு கல்விக்கென ஒதுக்கி கல்விக்கண் திறந்தவர் காமராசர். தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம் எனும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் கனவை நினைவாக்கியவர். தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதில் காமராசரின் பங்கு மிகப் பெரியது. அகில இந்திய காங்கிரசில் முதன்முறையாக தமிழில் உரையாற்றி தமிழ் இனத்திற்கும் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்தவர். காந்தியடிகளின் உண்மையான சீடராகவும் நேருவின் மதிப்பிற்குரிய தலைவராகவும் விளங்கியவர். காமராசரின் அரசியல்நுட்பத்தையும் மனிதநேய பெருங்குணத்தையும் பட்டியலிட்டு அனைவரையும் நெக்குருக செய்தார் பொழிவாளர்.படச்செய்தி:

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 71ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தாய் 71 பெருவிழாவில் இன்று (20.02.2019) காலை, நிறுவன பதிப்புத் துறை தலைவர் முனைவர் ஆ. தசரதன் அவர்கள் பொறுப்பாளராக உள்ள பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் என்ற அறக்கட்டளைச் சார்பில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் மதுரை, தமிழ்த் தேசியத் தலைவரும் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனருமான திரு. பழ. நெடுமாறன் அவர்களின் இந்திய அரசியலில் பெருந்தலைவர் காமராசரின் பங்கு எனும் தலைப்பிலான சொற்பொழிவு நடைபெற்றது. பொழிவில் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், பொழிவாளர் திரு. பழ. நெடுமாறன், முனைவர் ஆ. தசரதன், நிறுவன கணக்கர் திருமதி இலட்சுமி நடராசன் ஆகியோர்