‘தமிழியல் முன்னாய்வு நெறிமுறை’- ஆய்வுத்திட்டக் கருத்தரங்கம்'

நிகழ்வு நாள் : 21.02.2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (21.02.2025) ‘தமிழியல் முன்னாய்வு நெறிமுறை’- ஆய்வுத்திட்டக் கருத்தரங்கச் சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளின் தொடக்கமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல இணைப்பேராசிரியருமான முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கிட, நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பு இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து சென்னை செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவன ஆய்வறிஞர் பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் "சங்க இலக்கிய முன்னாய்வு நெறிமுறை" எனும் பொருண்மையிலும், விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் ப. தாமரைக்கண்ணன் அவர்கள் "தொல்காப்பிய இலக்கண முன்னாய்வு நெறிமுறை" எனும் பொருண்மையிலும் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
இறுதியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுகலை மாணவி செல்வி மு. கார்த்திகா அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.