“தினமணி அறக்கட்டளை”மற்றும் "பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ., அறக்கட்டளை"

நிகழ்வு நாள் : 19.02.2025

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (19.02.2025) அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளின் தொடக்கமாக “தினமணி அறக்கட்டளை”மற்றும் "பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ., அறக்கட்டளை" ஆகிய இரு அறக்கட்டளைகளின் பொறுப்பாளரும், நிறுவனத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சுலோசனா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் முன்னிலை வகிக்க, நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பு இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து தினமணியின் மூத்த ஆசிரியர் ஆ.நா.சிவராமன் (ஏ.என்.சிவராமன்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற முதல் பொழிவில் இலங்கை, தேசியக் கல்வி நிறுவகம், தமிழ்மொழித் துறை, இயக்குநர் முனைவர் முருகு தயாநிதி அவர்கள் "மட்டக்களப்புத் தமிழகத்தில் வள்ளியம்மை" எனும் பொருண்மையில் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது. பின்பு நடைபெற்ற இரண்டாம் பொழிவில் சென்னை அடையாறு, பாட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் ஏ. இராஜசேகர் அவர்கள் "தமிழ் மொழியின் வளர்ச்சி: ஐரோப்பிய காலம் முதல் சமகாலம் வரை" எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார்.
இறுதியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவி செல்வி
மி. பிறைலின்டின்சியா இணைப்புரையாற்றிட நிறுவன மாணவி செல்வி
சி. கயல்விழி அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி 1: 19.02.2025 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தினமணியின் மூத்த ஆசிரியர் ஆ.நா.சிவராமன் (ஏ.என்.சிவராமன்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தினமணி அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற "மட்டக்களப்புத் தமிழகத்தில் வள்ளியம்மை" எனும் பொருண்மையில் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் நிறுவன இயக்குநர் (கூ.பொ.) நூலினை வெளியிட, நூலாசிரியர் நூலினைப் பெற்றுக்கொண்டார், நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் ஏ.இராஜசேகர், சொற்பொழிவாளரும் நூலாசிரியருமான இலங்கை, தேசியக் கல்வி நிறுவகம், தமிழ்மொழித் துறை, இயக்குநர் முனைவர் முருகு தயாநிதி, நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் மற்றும் அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நிறுவன உதவிப்பேராசிரியருமான முனைவர் நா.சுலோசனா ஆகியோர்.

படச்செய்தி 2: 19.02.2025 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ., அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற "தமிழ் மொழியின் வளர்ச்சி: ஐரோப்பிய காலம் முதல் சமகாலம் வரை" எனும் பொருண்மையில் நடைபெற்ற சொற்பொழிவில் சென்னை அடையாறு, பாட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் ஏ. இராஜசேகர் அவர்கள் பொழிவாற்றினார். உடன் நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், இலங்கை, தேசியக் கல்வி நிறுவகம், தமிழ்மொழித் துறை, இயக்குநர் முனைவர் முருகு தயாநிதி, நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், நிறுவன மாணவி செல்வி மி. பிறைலின்டின்சியா மற்றும் அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நிறுவன உதவிப்பேராசிரியருமான முனைவர் நா.சுலோசனா ஆகியோர்.