தமிழ் மொழி - இணையமும் இளையோர் வாழ்வும் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 06.12.2024

வேலூர், காட்பாடி, அக்சிலியம் கல்லூரி, தமிழ்த்துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து (6-12-2024) வெள்ளிக்கிழமை அன்று, ‘தமிழ் மொழி - இணையமும் இளையோர் வாழ்வும்’ எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது.

இக்கருத்தரங்கத் தொடக்க விழாவில், கல்லூரியின் முதல்வர் சகோ. முனைவர் அ. ஆரோக்கிய ஜெயசீலி தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கோ. செந்தில்செல்வி வரவேற்புரை வழங்கினார். முத்துக்கமலம் மின்னிதழ் ஆசிரியர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி மற்றும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. சிதம்பரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சேலம், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல்துறைப் பேராசிரியர் முனைவர் மா. தமிழ்ப்பரிதி மாரி சிறப்புரையாற்றினார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா (கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்) கருத்துரை வழங்கினார். இவ்விழாவில் கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.

கருத்தரங்க நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக
வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஜி. வி. செல்வம் அவர்கள் கருத்தரங்கில் கட்டுரையாளர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.