பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -3

நிகழ்வு நாள் : 18.09.2024

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (18.09.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன முதுகலை மாணவி திருமிகு சி.கயல்விழி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திருமிகு கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார். நிறுவன உதவிப் பேராசிரியரும் ஆய்விருக்கைப் பொறுப்பாளருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் அவர்கள் நோக்கவுரையாற்றினார்.

திமுக, மாநிலச் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் "பாரதிதாசன் - வரலாற்றின் வழக்குரைஞர்" எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவி திருமிகு மி.பிறைலின் டின்சியா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிட, நிறுவன மாணவர் திருமிகு வி.விஜய் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (18.09.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற்பொழிவினை திமுக, மாநிலச் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் "பாரதிதாசன் - வரலாற்றின் வழக்குரைஞர்" எனும் பொருண்மையில் பொழிவாற்றினார். உடன் நிறுவன மாணவர் வி.விஜய், நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திருமிகு கோபிநாத் ஸ்டாலின், நிறுவன உதவிப் பேராசிரியரும் ஆய்விருக்கைப் பொறுப்பாளருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம், நிறுவன மாணவிகள் திருமிகு மி.பிறைலின் டின்சியா மற்றும் திருமிகு சி.கயல்விழி ஆகியோர்.