பேரறிஞர் அண்ணா 116ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் திருநாள்

நிகழ்வு நாள் : 13.09.2024

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், நிறுவனம் தோற்றுவிப்பதற்கு முழுமுதற் காரணமாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் (செப்டம்பர்-15) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் திருநாளாக இன்று (13.09.2024) வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக, முற்பகல் 10.30 மணிக்கு நிறுவன வளாகத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் க.சுசீலா அவர்கள் வரவேற்புரையாற்றிட நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் நோக்கவுரையாற்றினார்.
நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
திரு. கூ.வ. எழிலரசு தம் உரையில் தமிழனைத் தமிழனுக்கே உணர்த்திய பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்கள், அண்ணா என்றால் விழிப்புணர்வு என்பதாகும், அண்ணாவை அறிந்துகொள்ளாமல் இன்றைய மாணவர்கள் இந்த நூற்றாண்டை கடக்க இயலாது என்றும், மாணவர்கள் அண்ணாவின் கருத்துகளைப் பின்பற்றி வாழ்வில் வளம்பெற கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மொழிபெயர்ப்பாளரும் ஊடகவியலாளருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள் 'பேரறிஞர் அண்ணாவின் புதிய தமிழ்ப் பார்வை' எனும் பொருண்மையில் பேருரையாற்றினார்,
அவர்தம் உரையில்... பேரறிஞர் அண்ணா அவர்களின் 40 நூல்களை தாம் மொழிபெயர்த்துள்ளதாகவும், அவற்றுள் பணத்தோட்டம் எனும் நூல் இன்றளவிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். சுயமரியதை திருமணம் அண்ணா அவர்களின் அரசால் சட்டபூர்வமாக்கப்பட்டது பாராட்டுதலுக்குரியது என்றார். மேலும், பொழிவாளர் தம் 'ஐலெசா' நிறுவனத்தின் வழி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் வரையிலான சொற்களை மொழிபெயர்ப்பதற்கான மென்பொருளை அன்பளிப்பாக வழங்குவதாகவும், இம்மென்பொருள் மொழி பாடம் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தார்.
நிறுவன மாணவி செல்வி அ.பவித்ரா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட, நிறுவன கண்காணிப்பாளர் திருமதி எ.ம.லட்சுமி அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி 1: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 116ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாளாகக் கொண்டாடப்பட்டது. நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும், படத்திற்கு மொழிபெயர்ப்பாளரும் ஊடகவியலாளருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார். உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு, நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் மற்றும் நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் மணிக்கோ. பன்னீர்செல்வம் ஆகியோர்.

படச்செய்தி 2: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 116ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாளாகக் கொண்டாடப்பட்டது. மொழிபெயர்ப்பாளரும் ஊடகவியலாளருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் புதிய தமிழ்ப் பார்வை எனும் தலைப்பில் பேருரையாற்றினார். உடன் நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், நிறுவன உதவிப்பேராசிரியர்கள் முனைவர் மணிக்கோ. பன்னீர்செல்வம் மற்றும் முனைவர் க.சுசிலா ஆகியோர்.

படச்செய்தி 3: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 116ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாளாகக் கொண்டாடப்பட்டது. தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உடன் நிறுவன கண்காணிப்பாளர் திருமதி எ.ம.லட்சுமி, நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், மொழிபெயர்ப்பாளரும் ஊடகவியலாளருமான ஆழி செந்தில்நாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், நிறுவன உதவிப்பேராசிரியர்கள் முனைவர் மணிக்கோ. பன்னீர்செல்வம் மற்றும் முனைவர் க.சுசிலா ஆகியோர்.