தமிழ்நாடு அரசின் சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பான பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிடுதல்

நிகழ்வு நாள் : 07.03.2024

பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிடுதல் திட்டத்தினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேற்கொள்ள அரசாணை எண் 219, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(தவ.1.1)த் துறை, நாள் 06.11.2023 வழி ரூ. 10.00 இலட்சம் ஒப்பளிப்புச் செய்து வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் அகத்திணை, புறத்திணை, அறஇலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், கவிதைகள், புதுக்கவிதைகள், நாடகம் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஆகிய தலைப்புகளில் நூல்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒலி நூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
07.03.2024 - வியாழக்கிழமை அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை ஐம்பெரும் விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் அவர்களால் ஒலி நூல் வெளியீடு நடைபெற்றது.