கவிஞர் தமிழ்ஒளி படைப்புவெளி நூல் வெளியீடு

நிகழ்வு நாள் : 07.03.2024

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் இன்று (07.03.2024) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் கவிஞர் தமிழ்ஒளி படைப்புவெளி எனும் 35 கட்டுரையாளர்களின் கட்டுரை தொகுப்பு நூலினை வெளியிட, தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களும் மாண்பமை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.