மொழியியல் நுணுக்கப் பயிற்சி”நிறைவு விழா

நிகழ்வு நாள் : 28.11.2023

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதிநல்கையில் பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான “மொழியியல் நுணுக்கப் பயிற்சி 01.11.2023 முதல் 28.11.2023 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா இன்று (28.11.2023) பிற்பகல் 2 மணிக்கு நிறுவனத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்கமாகப் பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள், மொழியியல் நுணுக்கப் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் கி.கருணாகரன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
நிறைவாக, நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல இணைப் பேராசிரியரும் இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்
பெ. செல்வக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிறுவன மாணவர் திரு. செ.செல்வம் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் மொழியியல் நுணுக்கப் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களோடு நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் நிறுவன மாணவர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.