நிறுவன நாள் (21.10.2022) விழா

நிகழ்வு நாள் : 21.10.2022

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நாளான (21.10.1970) அக்டோபர்த் திங்கள் 21ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் நிறுவன நாளாகக் கொண்டாடிவருகிறது. அந்த வகையில் இன்று (21.10.2022) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. நிறுவன நாள் சிறப்புரையாக "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - இன்றும், இனியும்..." எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியற் புல இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார், நிறுவன நாள் விழாவினை முன்னிட்டு நடத்தியக் கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் பாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற நிறுவன மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிறுவன முதுகலை மாணவர் செல்வி தே.சுபஸ்ரீ அவர்கள் நன்றி நவின்றார். முதுகலை மாணவர் திரு. செ.செல்வம் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள், மாணவர்கள், மேனாள் பேராசிரியர்கள் மற்றும் மேனாள் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.