மொழிபெயர்ப்பு நாள் (30.09.2022) விழா

நிகழ்வு நாள் : 30.09.2022

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், மொழிபெயர்ப்பு நாளையொட்டி (செப்டம்பர் 30) தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் மொழிபெயர்ப்பு நாள் விழா இன்று (30.09.2022) கொண்டாடப்பட்டது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் தலைமையில் இவ்விழா தொடங்கியது. அவர் தமது தலைமையுரையில் மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றிய தன்னுடைய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்,
இதனைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு நாள் சிறப்புரையாக ‘மொழி வளத்திற்கு மொழிபெயர்ப்பின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு அவர்கள் பேருரையாற்றினார்.
முன்னதாக நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் வரவேற்புரையாற்றினார், நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியற் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
படச்செய்தி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மொழிபெயர்ப்பு நாள் விழா 30.09.2022: நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள், நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர்
ஆ. மணவழகன், மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு மற்றும் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா.