உலக மொழி பெயர்ப்பு நாள்

நிகழ்வு நாள் : 16.10.2018

தலைப்பு : மொழிபெயர்ப்பு என்னும் அருங்கலை

உலக மொழி பெயர்ப்பு நாளை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 16.10.2018 அன்று நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை ஏற்று நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். நிறுவன இணைப் பேராசிரியர் பெ. செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி “மொழிபெயர்ப்பு என்னும் அருங்கலை” என்ற தலைப்பில் முனைவர் ப.மருதநாயகம், ஆய்வறிஞர் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக நிறுவன ஆய்வியல் நிறைஞர் மாணவர் திரு இரா.சுசில்குமார் நன்றியுரை கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

படச்செய்தி: முனைவர் ப.மருதநாயகம் சொற்பொழிவு ஆற்ற உடன் நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராவன், தனிஅலுவலர் மார்டின் செல்லதுரை, முனைவர் பெ.செல்வக்குமார், ஆய்வியல் நிறைஞர் மாணவர் இரா. சுசில்குமார், மற்றும் முனைவர் பட்ட மாணவி சாருமதி அவர்கள்