உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு வெளியீடாக, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முதல் நூலாக பா.ரா. சுப்பிரமணியம் மொழிபெயர்த்த இராபர்டு கால்டுவெல்லின் “திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்”

நிகழ்வு நாள் : 16.02.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.2.2022) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 45-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடாக, திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக The Cilappatikaram : The Tale of an Anklet (சிலப்பதிகாரம்), In Defiance: Our Stories: Short fiction by Dalit Writers (தலித் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு), Meeran's Stories (தோப்பில் முகமதுமீரான் சிறுகதைகள்), Essays of U Ve Sa: The man who revived Ancient Tamil Literature (உ.வே.சா கட்டுரைகள்), Katha Vilasam: The Story within (கதாவிலாசம்), Putham House (புத்தம்வீடு - புதினம்) ஆகிய 6 ஆங்கில நூல்களையும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு வெளியீடாக, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முதல் நூலாக பா.ரா. சுப்பிரமணியம் மொழிபெயர்த்த இராபர்டு கால்டுவெல்லின் “திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” ஆகிய நூல்களை வெளியிட, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திரு. திண்டுக்கல் லியோனி, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.எஸ். வயிரவன், செயலாளர் திரு.எஸ்.கே. முருகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.